மலையகப்பகுதியில் தொடர் மழை காரணமாக இயல்பு வாழ்க்கை பதிப்பு (படங்கள்)
மலையகப்பகுதியில் தொடர்ந்தும் பெய்யும் கடும் மழை காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு விவசாயிகளும், மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
அட்டன் கொழும்பு பிரதான வீதியிலும் அட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் வீதி வழுக்கும் தன்மையாக இருப்பதனாலும் பிரதான வீதிகளில் பனிமூட்டம் காணப்படும் பட்சத்தில் வாகன சாரதிகள் வாகனங்களின் முன்விளக்கை ஒளிரவிட்டு செலுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்தோடு மேல்கொத்மலை நீா்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுவதாகவும் தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் வான்கதவுகளை திறந்து விடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு வான்கதவுகள் திறந்து விடும் பட்சத்தில் அதனை அண்மித்த பகுதியில் வாழும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு பலத்த காற்று வீசுவதனால் மரங்கள் முறிந்து விழும் அபாயமும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அட்டன் கொழும்பு பிரதான வீதியிலும் அட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும் இன்று காலை அதிக பனிமூட்டம் காணப்பட்டமை குறிப்பிடதக்கது.
அட்டன் நகருக்கு அண்மையில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் பல வீதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் மக்களின் அன்றாட வாழ்வியல் நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளன.
மழை பெய்து வருவதால் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.