செய்திகள்

மலையக சமூகத்தினர் இ.தொ.கா வுடன் இணைந்து செயற்பட வேண்டும்

மலையக சமூகத்தினர் எதிர்வரும் காலங்களிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் இணைந்து செயற்பட வேண்டுமென காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த காலப்பகுதிகளில் மக்களின் உட்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், விளையாட்டு, அரசதுறை சார்ந்த வேலைவாய்ப்புகள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் மலையக மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டதாகவும், தொழிலாளர்களின் சம்பள உயர்வு உட்பட அனைத்துத் துறைகளிலும் தமது கட்சியினால் பெருமளவு சேவையாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் அமைப்பாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் கொட்டகலை, காரியாலயத்தில்  நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

மேலும் மலையக சமூகத்தினர் எதிர்காலம் கருதி பொதுத் தேர்தலின்போது ஒன்றுபட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 DSC_0048 DSC_0045 DSC_0043