செய்திகள்

மலையக தொழிற்ச் சங்க மே தின கூட்டங்கள்

மலையக தொழிற்சங்க அமைப்புகளின் மேதினக்கூட்டங்கள் இம்முறை பதுளை, ஹாலிஎல, தலவாக்கலை, மாத்தளை, கண்டி ஆகிய பகுதிகளில் இடம்பெறவுள்ளது. சில தொழிற்சங்கங்கள் மேதின கூட்டங்களை சாதாரணமாக நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டம் தலவாக்கலை நகர சபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டம் பதுளை மாவட்டத்தில் ஹாலிஎல பொது மைதானத்தில் நடத்தப்படவுள்ளது.

விவசாய தொழிலாளர் காங்கிரஸின் மேதினம் பதுளை வீல்ஸ்பாக் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் ஜக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொழும்பு கெம்பல் மைதானத்தில் நடத்தவுள்ளது. இலங்கை தொழிலாளர் செங்கொடிசங்கமும் வீட்டு வேலை தொழிலாளர் சங்கமும் இணைந்து இம்முறை கண்டியில் மேதின விழாவை நடத்துகின்றது. இங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் மேதினகூட்டமானது இம்முறை அவிசாவளை நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதேவேளை மலையக மக்கள் முன்னணி அவ்வவ் தோட்டங்களில் தோட்ட தலைவர்களின் தலைமையில் மேதின விழா இடம்பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு தொழிலாளர் தேசிய சங்கத்தின் மேதினகூட்டங்களும் தோட்டவாரியாக இடம்பெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இதேவேளை புதிய ஜனநாயக மாக்ஸிய லெனினிச கட்சியின் மலையக பிராந்தியத்தின் மேதினக்கூட்டம் மாத்தளை நகரில் இடம்பெறவுள்ளது. அனைத்து கூட்டங்களும் மே மாதம் முதலாம் திகதிகளில் குறிப்பிட்ட இடங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

அத்தோடு மேதினத்தில் மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவர் வீ.இராதாகிருஷ்ணன் தலைமையில் மலையக மக்கள் முன்னணி பொது செயலாளர் ஏ.லோறன்ஸின் ஏற்பாட்டில் மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி, மலையக ஆசிரியர் முன்னணி ஆகியோர் இணைந்து தேர்தல் சீர்திருத்தத்தில் மலையக தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கோரி அட்டன் நகரில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக மலையக மக்கள் முன்னணி பொது செயலாளர் தெரிவித்தார்.