செய்திகள்

மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அட்டன் நகரில் கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்)

தொழிலாளர்களின் தினமான மேதினத்தை முன்னிட்டு 01.05.2015 இன்று மலையக மக்கள் முன்னணி ஹட்டன் நகரில் 19 ஆவது திருத்த சட்டம் தொடர்பாகவும் எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 20 ஆவது திருத்த சட்டம் தொடர்பாகவும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

ஹட்டன் பிரதான வீதியில் துண்டுபிரசுரங்களை விநியோகம் செய்ததோடு ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தில் தெளிவுபடுத்தும் கூட்டமும் நடைபெற்றது.

இதில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ், முன்னணியின் நிதிச் செயலாளர் அ.அரவிந்தகுமார், மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அணி செயலாளருமான ஆர்.ராஜாராம், மாவட்ட தலைவர்கள் உட்பட தோட்ட தொழிலாளர்களும் ஊர்வலமாக வருகை தருவதை படங்களில் காணலாம்.

DSC_0545

DSC_0541

DSC_0526

DSC_0522

DSC_0518