செய்திகள்

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு (படங்கள்)

நானூஓயாவிலிருந்து கண்டி வரை சென்ற ரயில் என்ஜீன் ஒன்று தடம் புரண்டுள்ளது.

அதனால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

அட்டன் மற்றும் ரொசல்ல ஆகிய புகையிரத நிலையத்திற்கு இடையில் 106 1/2 கட்டைப்பகுதியில் (22.05.2015) பிற்பகல் வேளையில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரயில் பாதையை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது.

Rail  (1) Rail  (2) Rail  (3) Rail  (4) Rail  (5) Rail  (7)