செய்திகள்
மலையக ரயில் சேவைகள் பாதிப்பு
கொழும்பிலிருந்து பதுளை வரை சென்ற ரயில் அட்டன் மற்றும் ரொசல்ல ஆகிய புகையிரத நிலையத்திற்கு இடையில் 106 1/2 கட்டைப்பகுதியில் இன்று பிற்பகல் வேளையில் தடம் புரண்டதன் காரணமாக அதில் பயணித்த பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மற்றொரு ரயில்க்கு மாற்றியுள்ளனர்.
ரயில் பாதையை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது.