செய்திகள்

மலையாள இயக்குனரை இரண்டாவதாக காதலித்து கரம் பிடித்தார் நடிகை ஜோதிர்மயி

மலையாள இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளருமான அமல் நீரத்தை நடிகை ஜோதிர்மயி காதலித்து மணந்துள்ளார்.

நடிகை ஜோதிர்மயி கேரளாவைச் சேர்ந்தவர். இவர் தமிழில் தலைநகரம், விஜயகாந்துடன் சபரி, நான் அவன் இல்லை, வெடிகுண்டு முருகேசன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

நடிக்க வருவதற்கு முன்பே திருமணமானவர் இவர். கல்லூரியில் படித்த காலத்தில் நிஷாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்திருந்தார். பின்னர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்த நிலையில், மலையாள இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான அமல் நீரத்தை காதலித்து வந்தார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் கொச்சியில் இன்று பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு இரு தரப்பு குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.