செய்திகள்

மல்லாகத்தில் 14 வயது பாடசாலைச் சிறுமி மீது 52 வயது நபர் வல்லுறவு முயற்சி

யாழ்.மல்லாகம் நரியிட்டான் பகுதியில் பாடசாலை செல்லும் சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்தறிற்கு உட்பவடுத்த முயன்ற 52 வயதுடைய நபர் நேற்றுத் தெல்லிப்பழைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் குறித்த சிறுமி பாடசாலைக்குச் சென்று வரும் வழியில் இடைமறித்த குறித்த நபர் அந்தச் சிறுமிக்கு ஆசை வார்த்தைகள் கூறி மேற்படி பகுதியின் அருகிலுள்ள பழைய வீட்டுக்குள் அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டுள்ளார்.இதன் போது குறித்த நபரின் பிடியிலிருந்து தப்பிச் சென்ற சிறுமி நடந்த விடயத்தைத் தனது பெற்றோருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

பெற்றோர் இந்த விடயம் தொடர்பில் தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸாhர் சந்தேகநபரை அவரது வீட்டில் வைத்து நேற்றுக் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார் மருத்துவப் பரிசோதனைகளின் பின்னர் குறித்த சந்தேகநபரை யாழ்.சிறுவர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழ்.நகர் நிருபர்-