செய்திகள்

மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் ரத்து

இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் பதுல்லா டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி ஒரு  டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது. இப்போட்டி பதுல்லாவில் நடக்கிறது. முதல் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 239 ரன்கள் எடுத்தது.தவான் (150), முரளி விஜய் (89) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால், காலை முதலே கனமழை பெய்தது. தொடர்ந்து மழை அதிகரிக்கவே, இன்றைய நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.