செய்திகள்

மழையால் போட்டி கைவிடப்பட்டது

இலங்கை நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஓரு நாள் போட்டி 28 ஓவர்கள் மாத்திரமே விளையாடப்பட்ட நிலையில் மழைகாரணமாக கைவிடப்பட்டுள்ளது.
அவுக்லன்டில் இன்று ஆரம்பமான போட்டியில் இலங்கை அணி நாணயசுழற்சியில் வென்று நியுசிலாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.
நியுசிலாந்து அணியின் தலைவர் பிரென்டன் மக்கலம் வழமைபோன்று மிகவேகமான ஆரம்பத்தை அணிக்கு அளித்தாh, 31 பந்துகளில் 2 இரண்டு சிக்ஸர் அடங்கலாக 28 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை அவர் இலங்கை அணிதலைவர் மத்யுசின் பந்துவீச்;சில் ஆட்டமிழந்தார்,
மழை குறுக்கிட்டதன் காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஆட்டம் அணிகளுக்கு தலா43 ஓவர்கள் என்ற அடிப்படையில் மீண்டும் ஆரம்பமான போதிலும் பின்னர் 28வது ஓவரில் பெய்யத்தொடங்கிய கடும் மழை காரணமாக முற்றாக கைவிடப்பட்டது, அவ்வேளை நியுசிலாந்து அணி 3 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஆரம்பதுடுப்பாட்ட வீரர் மார்ட்டின் கப்டில் ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களை பெற்றிருந்தார்.இலங்கை அணிதலைவரே 3விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.