செய்திகள்

மஸ்கெலியாவில் சடலம் மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓல்டன், கிங்கோரா  பகுதியில்  இளைஞனின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக மஸ்கெலிய பொலிஸார் தெரிவித்தனர்.

ஓல்டன் சாமிமலை தோட்டத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் விஸ்வலிங்கம் (வயது 31) என்ற இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டிலிருந்து வெளியில் சென்ற குறித்த இளைஞன், மீண்டும் வீடு திரும்பாத நிலையில் உறவினர்களினால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யபட்டதையடுத்து பொலிஸாரும் பிரதேச மக்களும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், 29.05.2015 அன்று வெள்ளிக்கிழமை காலை வேலைக்குச் சென்றவர்கள் கிங்கோரா நீரோடையில் சடலம் மிதப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சடலம் இருக்கின்ற உரிய இடத்திற்கு சென்ற அட்டன் பதில் நீதவான் தமயந்தி பெர்ணாண்டோ விசாரணைகளை மேற்கொண்ட பின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தற்கொலையா அல்லது கொலையா என மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC09652 DSC09653 DSC09658 DSC09662 DSC09667