செய்திகள்

மஹிந்த,மைத்திரி,சந்திரிகா ஒரே மேடையில் ?

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகிய மூவரும்  மேடையில் தேர்தல் பிரசாரம்மேற் கொள்ளவேண்டும்.

இவ்வாறு ஸ்ரீலங்கா  சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற  உறுப்பினர்    விஜித் விஜிதமுனி சொய்சா  மக்கள்   சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும் இம் மூவரும் எதிர்வரும் தேர்தலில் ஒன்றுசேர்ந்து   பிரசாரத்தில் ஈடுபட்டால்  சித்திரை புத்தாண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆண்டாக அமையும் என தெரிவித்தார்.