செய்திகள்

மஹிந்தவிடம் 200 மில்லியன் ரூபா கோரி வழக்கு தொடர ரவி கருணாநாயக்க தீர்மானம்

முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் 2000 மில்லியன் ரூபா மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்போவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

லங்கா புத்திர அபிவிருத்தி வங்கியினால் கடன் வழங்குவதற்காக ரவி கருணாநாயக்க பட்டியல் அனுப்பியுள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்த கருத்து தனது நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனால் இரண்டு பில்லியன் நட்டஈடு கோரி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

லங்கா புத்திர அபிவிருத்தி வங்கியினால் கடன் வழங்குவதற்காக ரவி கருணாநாயக்க பட்டியல் அனுப்பியுள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்த கருத்து தனது நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவரிடம் 2000 மில்லியன் நட்டஈடு கோரி அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்யுமாறு எனது சட்டதரணிகளுக்கு நான் கூறியுள்ளேன். இல்லை என்றால் இவை கோமாளித்தனமாகிவிடும். என அவர் தெரிவித்துள்ளார்.