செய்திகள்

மஹிந்தவின் பிரசாரத்துக்கு பயன்படுத்திய பஸ்களுக்காக 1425 இலட்சம் செலுத்த வேண்டியுள்ளதாம்

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மஹிந்த ராஜபக்‌ஷவின் பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய பஸ்களுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு செலுத்த வேண்டிய 1425 இலட்சம் ரூபாவை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக உள்ளக போக்குவரத்து  அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த கட்டணம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அதனை அனுப்பி நீதிமன்றத்தினூடாக விரையில் அந்த கட்டணத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.