செய்திகள்

மஹிந்தவின் முன்னாள் ஜோதிடர் சுமனதாஷவிடம் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஜோதிடரான சுமனதாஷவிடம் பொலிஸ் குற்ற விசாரணை பிரிவினர் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர்.
மஹிந்தவின் குடும்பத்துக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் மேற்கொண்ட குற்றச்ச செயல்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக சுமனதாஷவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராஜபக்ஷ குடும்பத்தின் காணி மற்றும் வீடுகள் அமைத்தல் உள்ளிட்ட அவர்களின் முழு ஜோதிட விடயங்களையும் அவரே பார்த்து வந்ததால் அவருக்கு ராஜபக்‌ஷக்களின் சொத்து விபரங்கள் தெரியும் என்பதால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளன.
இந்த விசாரணையின் போது சுமனதாஷ முக்கிய தகவல்கள் பலவற்றை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரிடம் எதிர்வரும் தினங்களில் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்படவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.