செய்திகள்

மஹிந்தவின் வீட்டில் எம்.பிக்கள் (படங்கள்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக அவரின் கால்டன் இல்லத்துக்கு சென்ற எம்.பிக்கள் தற்போதய அரசியல் நிலவரம் தொடர்பாக அவருடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிய வருகின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உட்பட 30ற்கும் மேற்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எம்.பிக்களும் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் இந்த பயணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று காலை மஹிந்தவின் வீட்டுக்கு சென்ற இவர்கள் நீண்ட நேரம் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன் அங்கு நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டு பின்னர் அங்கிருந்து சென்றுள்ளனர்.
01
00