செய்திகள்

மஹிந்தவின் வீட்டுக்கு படையெடுத்துள்ள எம்.பிக்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அம்பாந்தோட்டை தங்கலையிலுள்ள கால்டன் வீட்டுக்கு சென்றுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 20ற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது அவருடன் கலந்துரையாடலகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, தினேஸ்குணவர்தன, பந்துல குணவர்தன, டி.பி.ஏக்கநாயக்க, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, மஹிந்தானந்த, சாலிந்ந திஸாநாயக்க உள்ளிட்ட எம்.பிக்கள் பலர் தற்போது மஹிந்தவின் வீட்டில் அவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் , சிங்கள புத்தாண்டையொட்டிய பயணமாகவே இது அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் எதிர்வரும் தேர்தலில் மஹிந்தவை களமிறக்கும் நோக்கில் செயற்படும் குழுவே இந்த பயணத்தை ஏற்பாடு செய்துள்ளமையினால் இந்த விடயம் அரசியலில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது.