செய்திகள்

மஹிந்தவின் ஹெலிகொப்டர் செலவுகள்! சுதந்திரக்கட்சியே ஏற்க வேண்டும் என்கிறார் விமல் வீரவன்ஸ

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்திய ஹெலிகொப்டர் செலவுகளை சுதந்திர கட்சியே பொறுப்பேற்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் அரசாங்கத்தில் தேர்தல் காலத்தில் சுமார் 23 ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தியுள்ளார்கள் எனவும் இதனால் பல மில்லியன் ரூபாய்கள் செலவானதாகவும் பாதுகாப்பு அமைச்சு சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இந்த ஹெலிகொப்டர்களை முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, பசில் ராஜபக்ச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச,சிரந்தி ராஜபக்ச ஆகியோரே பயன்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது.

இது தொடர்பாகவே விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.