செய்திகள்

மஹிந்தவுக்கு இடமுண்டா? இல்லையா? இன்று மைத்திரி அறிவிப்பார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு இடமளிப்பதா இல்லையா என்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அறிவிக்கப்படவுள்ளது.
நேற்று இரவு ஜனாதிபதிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டத்தின் போது இன்றைய தினம் தனது இறுதி தீர்மானத்தை அறிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு இடமில்லை என்ற தனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லையென நேற்று இரவே கட்சி பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.