செய்திகள்

மஹிந்தவுக்கு உயிர் அச்சுறுத்தலாம் : பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்ய திட்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக அராய்ந்து பார்க்குமாறும் கோரி  இன்று பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.
இன்று நன்பகல் 12 மணியளவில் கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் வைத்து பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்‌ஷவின் சிரேஷ்ட சட்டத்தரணிகளால் இந்த முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக மஹிந்தவின் ஊடக பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.