செய்திகள்

மஹிந்தவுக்கு எதிராக அநுராதபுரத்தில் ஆர்ப்பாட்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக நேற்று அநுராதபுரத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

‘அப்பி புரவசியோ ‘ (நாங்கள் பிரஜைகள்) ,’வீதியே விரோதய’ (வீதியில் எதிர்ப்பு) இயக்கங்களின் ஏற்பாட்டில் இந்த ஆரப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி விகாரைகள் மற்றும் வணக்கஸ்தளங்களை அரசியில் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.