செய்திகள்

மஹிந்தவுக்கு ஐ.ம.சு.கூவில் இடமில்லை : கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மைத்திரி தெரிவிப்பு

மஹிந்த ராஜபக்‌ஷவை  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராகவோ அல்லது வேட்பாளர் குழுக்களின் தலைவராகவோ போட்டியிடுவதற்கு அனுமதிக்கமாட்டேன் என்ற தனது நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டணியின் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி மஹிந்த ராஜபக்‌ஷ தனியான கட்சியிலேயே களமிறங்கவுள்ளமை உறுதியாகியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
இவ்வாறாக எந்த கட்சியில் போட்டியிடுவதென்று மஹிந்த ஆராய்ந்து வருவதாகவும் மூன்று கட்சிகள் தனது தெரிவில் அவர் வைத்துள்ளதாகவும் நன்றாக ஆராய்ந்து அதில் ஒன்றை அவர் தெரிவு செய்வார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.