செய்திகள்

மஹிந்தவுக்கு தனியான பாதுகாப்பு பிரிவை அமைக்க வங்கிக் கணக்கு ஆரம்பிப்பு

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக தனியான பாதுகாப்பு பிரிவொன்றை உருவாக்குவதற்காக வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு அபயாராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று அந்த விகாரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு எண்ணிக்கைகள் குறைக்கப்பட்டுள்ளன. அந்த குறைப்புக்கு ஏற்றால் போல் தனியான பாதுகாப்பு பிரிவை அமைப்பதற்கு பலர் உதவிகளை வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இதன்படி வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிக்கவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.