செய்திகள்

மஹிந்தவுக்கு போட்டியாக சந்திரிக்கா களமிறங்குவார்?

மஹிந்த ராஜபக்‌ஷ தனியான அணியில் எதிர்வரும் தேர்தலில் களமிறங்குவாராகவிருந்தால் அவருக்கு போட்டியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமரதுங்க களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் அவரின் செயலாளர் பீ.திஸாநாயக்க சிங்கள செய்தி சேவையொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையில் சந்திரிக்காவை பிரதமர் வேட்பாராக களமிறங்குமாறும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அவர் இன்னும் இது தொடர்பாக தீர்மானிக்கவில்லை. தனக்கு அப்படி மீண்டும் அதிகாரத்துக்கு வரும் நோக்கமில்லையென அவர் தெரிவிக்கின்றார். எவ்வாறாயினும் மக்களால் நிராகரிக்கப்பட்ட யாரேனும் தங்களுக்கு கிடைத்த வாக்கு வீதத்தை காட்டி தேர்தலில் போட்டியிடுவார்களளாக இருந்தால் சந்திரிக்காவுக்கும் 1994இல் 64 வீத வாக்குகள் கிடைத்தன இதன்படி அவர் பிரதமர் வேட்பாளராக களமிறங்கலாம். என பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.