செய்திகள்

மஹிந்தவுக்கு வேட்பு மனு வழங்கும் விடயம் : சந்திரிக்கா மைத்திரி சந்திப்பு?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும்  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநயக்க குமாரதுங்கவுக்குமிடையே இன்று கொழும்பில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பின் போது அவர்கள் இருவரை தவிர வேறு யாரும் கலந்துக்கொள்ளவில்லையென தெரிய வருகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு கொடுக்கும் விடயம் தொடர்பாகவே இதன்போது கலந்துரையாடப்பட்டிருக்கலாம் என்றே தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்தவுக்கு வேட்பு மனு கொடுக்கும் தீர்மானத்துக்கு சந்திரிக்கா எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.