செய்திகள்

மஹிந்தவுக்கு வேட்பு மனு கொடுக்க தான் இணங்கினேனா ? விரைவில் மைத்திரி அறிவிப்பார்

மஹிந்த ராஜபக்‌ஷ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் எதிர்ப்புகள் வெளியாக ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்தவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வேட்பு மனு வழங்குவதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜயந்த மட்டுமே அறிவித்துள்ளாரே தவிர ஜனாதிபதி தரப்பினரிடமிருந்து இது வரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை இதன்படி விரைவில் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி அறிவிப்பை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போதே மஹிந்தவுக்கு கட்சியில் வேட்பு மனு கொடுக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது உத்தியோகபூர்வமாக தெரியவரும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் மஹிந்தவுக்கு வேட்பு மனு வழங்க தான் இணங்கவில்லையென ஜனாதிபதி சோபித்த தேரரிடம் தெரிவித்துள்ளதாகவும் ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.