செய்திகள்

மஹிந்தவுக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட முடியாது?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாராக போட்டியிட இடமளிக்கப்படாது என்பது தற்போது உறுதியாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த செவ்வாய்க் கிழமை நடைபெற்ற ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரின் கூட்டத்தின் போது கூட்டமைப்பின் தேர்தல் செயற்பாடுகளுக்கு மஹிந்தவை இணைத்துக்கொள்வதற்கே மைத்திரி இணங்கியுள்ளதாகவும் அவரை பிரதமர் வேட்பாளராக போட்டியிட செய்வதற்கு அவர் இணங்கவில்லையெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சிக்குள் பெரும்பாலான உறுப்பினர்கள் மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்தாலும் கட்சித் தலைவரான ஜனாதிபதியும் கட்சியின் முக்கியஸ்தர்களும் அதற்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லைடியனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன்.
இந்நிலையில் மஹிந்த ராஜபக்‌ஷவும் தான் இன்னும் எந்த கட்சியில் எந்த மாவட்டத்தில் போட்டியிடுவது என்பது தொடர்பாக இன்னும் தீர்மானிக்கவில்லையெனவும் நேற்று முன்தினம் அபயாராமவில் நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது.