செய்திகள்

மஹிந்தவுக்கு ஶ்ரீ.ல.சு.கவிலோ ஐ.ம.சு.கூவிலோ இடமில்லை : ஜனாதிபதி உறுதியான நிலைப்பாட்டில்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினதோ பிரதமர் வேட்பாராக களமிறங்குவதற்கு மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு அனுமதியளிக்காதிருப்பதற்கே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாகவும் இது தொடர்பாக அவர் மஹிந்த தரப்பினருக்கு தெளிவாக கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இன்றைய தினம் மெதமுலனையில் நடைபெற்ற கூட்டத்தின் போது மஹிந்த ராஜபக்‌ஷ தமது அணி தேர்தலில் போட்டியிடும் என கூறிய போதும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியினதோ அல்லது ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதோ பிரதமர் வேட்பாளராக தான் களமிறங்குவேன் என அவர் கூறியிருக்கவில்லை.
இதேவேளை அந்த கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்  செயலாளர் சுசில் பிரேமஜயந்தவும் கலந்துக்கொள்ளவில்லை. எவ்வாறாயினும் மஹிந்த அணியினர் இன்னும் தாம் எந்த கட்சியில் போட்டியிடுவோம் என அறியாதே இருப்பதாகவே தெரிவிக்கப்படுகின்றது.