செய்திகள்

மஹிந்தவுடன் 100 முன்னாள் எம்.பிக்கள் : நாளை தனது தீர்மானத்தை அறிவிப்பார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு பிரதமர் வேட்பாளராக களமிறங்க அனுமதி கிடைக்காவிட்டால் அவருடன் புதிய கூட்டணியொன்றை அமைத்து வெற்றிலை சின்னத்திலேயே களமிறங்குவதற்கு ஐக்கிய  மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்  100ற்கும் மேற்பட்ட முன்னாள் எம்.பிக்கள் தயாராகவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் முக்கிய பதவிகள் வகிக்கும் சிலரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி மஹிந்த  ராஜபக்‌ஷ நாளை தனது தீர்மானத்தை தங்காலையிலுள்ள தனது கால்டன் இல்லத்திலிருந்து அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிணங்க நாளை கொழும்பிலிருந்து ஊடகவியலாளர்களை அங்கு அழைத்து செல்வதற்கு அவரின் ஆதரவு தரப்பினர் நடவடிக்கையெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

எவ்வாறாயினும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியென்ற பெயரில் வெற்றிலை சின்னத்திலேயே இவர்கள் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.