செய்திகள்

மஹிந்தவையும் இணைத்து செயற்பட மைத்திரி கூட்டத்தில் ஆராய்வு

எதிர்வரும் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி  எத்தகைய விதத்தில் செயற்படவேண்டும் என்பது தொடர்பாக ஆராய இன்று ஜனாதிபதி தலைமையில்  விஷேட கூட்டமொன்று நடந்தது.

இக்கூட்டத்தில் மகிந்த ராஜபக்சவையும் எதிர்வரும் தேர்தலில் இணைத்துக்கொண்டு செயற்படுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டதாக சுதந்திரக்கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

மேலும் சுதந்திரக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது ஆனால் முடிவு எட்டப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.