செய்திகள்

மஹிந்தவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு கொண்டுசெல்ல வேண்டாமென ஏதிர்க்கட்சியினர் சபையில் ஆர்ப்பாட்டம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை 24ம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபையில் கீழே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றே தமக்கு தீர்வு வேண்டுமென அவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இதன்போது அதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறித்த ஆணைக்குழு அதன் பணிகளையே செய்வதாகவும் இந்த விடயத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணியூடாக அதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல முடியுமென தெரிவித்துள்ளார்.