செய்திகள்

மஹிந்தவை ஐ.ம.சு.கூவில் களமிறக்க வேண்டும் : மைத்திரி – மஹிந்த இணைப்புக்குழு யோசனை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட இணைப்புக் குழுவின் அறிக்கை நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கட்சியை ஒன்றிணைக்க 5 யோசனைகள் அந்த அறிக்கையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட அனுமதிக்க வேண்டுமென்ற யோசனையும் அவற்றில் ஒன்று என தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைவராக தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கூட்டத்தின் போது முன் வைக்கப்பட்ட யோசனைக்கமைய மைத்திரி மஹிந்தவை இணைக்கும் வகையில் 6பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த குழு இரண்டு தரப்பினருடனும் கலந்துரையாடி குறித்த யோசனைகள் அடங்கிய அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.