செய்திகள்

மஹிந்தவை ஐ.ம.சு.கூவில் களமிறக்குவதா இல்லையா நிறைவேற்றுக் குழு தீர்மானிக்கும்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட இடமளிப்பதா இல்லையா என்பது தொடர்பாக தீர்மானமெடுக்கும் பொறுப்பு கூட்டமைப்பின் நிறைவேற்றுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி அதன் நிறைவேற்றுக்குழு கூடி தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை சந்தித்த போது மஹிந்தவை கூட்டமைப்பில் களமிறக்கும் தீர்மானத்துக்கு அவர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அந்த விடயம் தொடர்பாக நிறைவேற்றுக்குழுவில் ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.