செய்திகள்

மஹிந்தவை ஐ.ம.சு.கூவில் பிரதமர் வேட்பாளராக களமிறக்குவதா இல்லையா ? : தீர்மானம் அடுத்த வாரம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் மஹிந்த ராஜபக்ஷவை களமிறக்குவதா இல்லையா என்பது தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இறுதி தீர்மானம் வரும் செவ்வாய்க் கிழமை அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரெமஜயந்த தற்போது வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில் அவர் நாடு திரும்பியவுடன் இது தொடர்பாக சகல கட்சிகளுடனும் கூடி ஆராய்ந்து தீர்மானமொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் மஹிந்தவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடுவதற்கு இடமளிக்கப்படாது என்ற நிலையப்பாட்டிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.