செய்திகள்

மஹிந்தவை சந்திக்க 20ற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் இன்று மெதமுலன பயணம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற் குழுவிலிருந்து நீக்கப்பட்ட 5 எம்.பிக்கள் உட்பட 20ற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக அம்பாந்தோட்டை மெதமுலனவில் அமைந்துள்ள அவரின் வீட்டுக்கு செல்லவுள்ளனர்.
தமிழ், சிங்கள புத்தாண்டையொட்டி வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையிலே இந்த எம்.பிக்கள் அங்கு செல்லவுள்ளனர்.
சில நாட்;களுக்கு முன்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற் குழுவிலிருந்து நீக்கப்பட்ட பந்துல குணவர்தன , டி.பி.ஏக்கநாயக்க , சாலிந்த திஸாநாயக்க , ரோஹித அபேகுணவர்தன மற்றும் எஸ்.எம்.சந்திரசேன ஆகியோரும் இந்த பயணத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிய வருகின்றது.