செய்திகள்

மஹிந்தவை தன்னிடம் டியூசனுக்கு வருமாறு அழைக்கும் மங்கள

அரசாங்கத்தை எப்படி கவிழ்ப்பது என்று தெரிந்துக்கொள்ள தன்னிடம் டியூசன் வருமாறு வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு தெரிவித்துள்ளார்.
திருட்டு தேங்காய்களை நாடு பூராகவும் தேவாலயங்களுக்கு எடுத்துச் செல்வதினூடாக அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. எப்படி கவிழ்ப்பது என தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள் சொல்லித் தருகின்றேன். வீனாக தேங்காய்களை எடுத்துச் சென்று உங்களின் முடியாமையை காட்டாதீர்கள் என மங்கள மஹிந்த அணியினருக்கு தெரிவித்துள்ளார்.
கட்டுபொத்த பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
n10