செய்திகள்

மஹிந்தவை பிரதமராக்க வேண்டுமென அபயாராமவில் தீர்மானம் நிறைவேற்றம் : தேர்தலுக்கு தயாராகுமாறு மஹிந்த அழைப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க வேண்டுமென இன்று நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையில் நடைபெற்ற  கூட்டமொன்றில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எங்கள் தேசிய முன்னணி (அபே ஜாதிக பெரமுன) அமைப்பினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அந்த தீர்மானம் அடங்கிய பத்திரம் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அபயாராம விகரையில் மஹிந்த ராஜபக்‌ஷவை சந்தித்த அவர்கள் தமது தீர்மானம் தொடர்பாக அவரிடம் அறிவித்து அது தொடர்பான பத்திரத்தையும் கையளித்துள்ளனர்.
இதன் போது தற்போது ஆட்சி மாற்றம் தேவையாக இருப்பதாகவும் இதன்படி எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு தயராகுங்கள் எனவும் மஹிந்த அவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.