செய்திகள்

மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க வலியுறுத்தும் கூட்டம் இன்று மாத்தறையில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் வேட்பாளராக களமிரக்குமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளினால் இன்று மாத்தறை நகரில் பொதுக் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந’த கூட்டத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் எம்.பிக்கள் பலருமாக 80ற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கலந்துக்கொள்ளவுள்ளதாக குமாரவெல்கம எம்.பி தெரிவித்துள்ளார்.
மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக வேண்டுமென வலியுறுத்தி அவரின்  அதரவு தரப்பு எம்.பிக்களின் ஏற்பாட்டில் நாடெங்கிலும் நடத்தப்படும் கூட்டங்களின் ஓர் அங்கமாகவே இந்த கூட்டமும் நடைபெறவுள்ளது.
ஆனால் இது வரை மஹிந்த எந்த கூட்டத்திலும் கலந்துக்கொண்டதில்லை. தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்ட பின்னர் நடைபெறும் கூட்டத்தில் அவர் மேடையேறுவார் என அவரின் ஆதரவு தரப்பு எம்.பிக்கள் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.