செய்திகள்

மஹிந்தவை புதிய அணியில் களமிறக்குவோம் : வாசுதேவ நாணயக்கார

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பிரதமர் வேட்பாளராக களமிறங்க முடியாது என்பது உறுதியாகியுள்ள நிலையில் அவரை இணைத்துக் கொண்டு அவர் தலைமையில் புதிய அணியொன்றை அமைக்கும் பணிகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அவர் தரப்பு எம்.பிக்கள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக நேற்று அபயாராம விகாரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் எம்.பியான வாசுதேவ நணயக்கார தெரிவித்துள்ளதாவது, மஹிந்தவுக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அனுமதி கிடைக்காவிட்டால்  மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் நிச்சயமாக புதிய அணியை உறுவாக்கி அடுத்த தேர்தலில் போட்டியிடுவோம் என தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மக்களை தெளிவுபடுத்தும் வேலைத் திட்டமென்றை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் என்ன கட்சியில் போட்டியிடுவேன் என இன்னும் தீர்மானிக்கவில்லையென அண்மையில் மக்கள் சந்திப்பொன்றின் போது மஹிந்த கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.