செய்திகள்

மஹிந்தானந்த அளுத்கமகேயின் கடவுச்சீட்டு முடக்கம்

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் கடவுச்சீட்டு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெகத் பாலபெடபெந்தி குறிப்பிடுகின்றார்.