செய்திகள்

மஹிந்தானந்த நிதி மோசடி பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இன்று பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இவர் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில்  கராம்  மற்றும் சதுரங்க பலகைகளை கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி மோசடி தொடர்பாகவே விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் இவரிடம் 3 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த பெப்ரவரி மாதமும் இவர் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.