செய்திகள்

மஹிந்த அணியினர் தேர்தல்கள் ஆணையாளரை சந்திக்க திட்டம்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மஹிந்த தரப்பு முன்னாள் எம்.பிக்கள் குழுவொன்று இன்று தேர்தல்கள் ஆணையாளரை சந்திக்க திட்டமிட்டுள்ளது.

இன்று மாலை 3.30 மணியளவில் தேர்தல்கள் செயலகத்திற்கு இந்தக் குழு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கூட்டணி கட்சி தொடர்பாக தேர்தல்கள் ஆணையாரிடம் தெளிவுபடுத்தவே இந்த குழு செல்லவுள்ளதாகவும் இதன் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தொடர்பாக அந்த அணியினர் மேற்கொண்டுள்ள தீர்மானங்கள் வெளிப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.