செய்திகள்

மஹிந்த அணியில் கம்பஹாவில் களமிறங்குவேன் : பிரசன்ன ரணதுங்க

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த அணியில் கம்பஹா மாவட்டத்தில் தான் போட்டியிடுவேன் என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் பதவியிலிருந்து பதவி விலக்குவதற்கு சிலர் முயற்சிப்பதாகவும் ஆனால் தன்னை யாராலும் அதிலிருந்து விலக்க முடியாதெனவும் அந்த பதவியில் இருந்துக் கொண்டே தான் தேர்தலில் போட்டியிடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க வேண்டுமென்ற முயற்சியில் ஈடுபடும் குழுவில் இவரும் முக்கிய உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.