செய்திகள்

மஹிந்த ஆட்சிகால குற்றவாளிகள் ரணில் – மைத்திரி ஆட்சியில் பாதுகாக்கப்படுகின்றனர் : ஊழல் ஒழிப்பு குரல்

ரணில் மைத்திரி ஆட்சியில் மஹிந்த ஆட்சி ஊழல் மோசடிக்காரர்கள் பாதுகாக்கப்படுவதாக ஊழல் எதிர்ப்புக் குரல் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இன்று கொழும்பில் அந்த அமைப்பினால் நடத்தபட்ட ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றிய அந்த அமைப்பின் ஏற்பாட்டாளரான வசந்த சமரசிங்கவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்க காலத்தில் ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்குமாறு கோரியே மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்தனர். ஆனால் இந்த ஆட்சியாளர்களோ மக்களை ஏமாற்றி குற்றவாளிகளுக்கு பதவிகளை வழங்கி பாதுகாக்கின்றனர். மைத்திரிபால கட்சியில் தனது அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்காகவும் , ரணில் அரசாங்கத்தை தக்க வைத்துக்கொள்வதற்காகவும் குற்றவாளிகளை பாதுகாக்கின்றனர். எவ்வாறாயினும் இதனை பார்த்துக்கொண்டு நாம் சும்மா இருந்துவிடப் போவதில்லை போராட்டங்களை நடத்துவோம். என அவர் தெரிவித்துள்ளார்.