செய்திகள்

மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பாக இதுவரை 169 பேருக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு

கடந்த ஆட்சியின் போது பல்வேறு பதவிகளை வகித்த அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் அடங்களாக 169 பேருக்கு எதிராக இதுவரை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில்   முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறாக கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளில் 31 பேருக்கு எதிராக   நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இந்த முறைப்பாடுகளை  விசாரi செய்யும் வகையில் விசாரணை பிரிவை விரிவு படுத்த பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும்; தெரிவிக்கப்படுகின்றது.