செய்திகள்

மஹிந்த ஆட்சியில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட 60 பேர் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன : ஜோன் அமரதுங்க

கடந்த ஆட்சியில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பதவிகள் வகித்த 60 பேர் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் அவர்களில் பலர் கைது செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.