செய்திகள்

மஹிந்த ஆட்சியில் வீதி அபிவிருதிக்கான நிதியில் 28000 மில்லியன் ரூபா வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது : பிரதமர்

கடந்த அரசாங்கத்தில் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென அரச வங்கியொன்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட 55000 மில்லியன் ரூபா நிதியில் 28000 மில்லியன் ரூபா வேறு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள்ளார்.

நேற்று கண்டி பண்வில பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் போது அரச வங்கியொன்றிலிருந்து வீதி அபிவிருத்தி பணிகளுக்கென 55000 மில்லியன் ரூபா நிதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அதில் 28000 மில்லியன் ரூபா அன்னதானம் கொடுத்தல்உள்ளிட்ட வேறு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை என்னவென்று கூறுவது. திருட்டு என்று கூறமுடியாதா. இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்துவது அரசியல் பழிவாங்கல் என்கின்றனர். என பிரதமர் தெரிவித்துள்ளார்.