செய்திகள்

மஹிந்த எமது மே தினக் கூட்டத்தில் கலந்துக்கொள்வார் என நம்புகின்றோம் : ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி

தமது மேதின கூட்டத்தில் முன்னாள் ஜயாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துக் கொள்வார் என நம்புவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

நாளை கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேதின கூட்டம் ஜனாதிபி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ள நிலையில் கட்சியின் போசகர் மற்றும் ஆலோசகர் என்ற வகையில் அதற்கான அழைப்பு கடிதம் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்படி அவர் தமது கூட்டத்தில் கலந்துக்கொள்வார் என நம்புவதாக அந்தக் கட்சியினரால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் மஹிந்த எந்த கூட்டத்தில் கலந்துகொள்வது என்றோ அல்லது கூட்டங்களில் கலந்துக்கொள்ள மாட்டேன் என்றோ இதுவரை அறிவிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.