செய்திகள்

மஹிந்த குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அவர்களின் கைக்கூலியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சிலர் செயற்படுகின்றனர் – வி.மணிவண்ணன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் 2015ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் எனத் திரிந்தவர்கள்.அதேபோல், 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் கோட்டாபய ராஜபக்ஷவை வெல்ல வைப்பதற்காக பல பிரயத்தனங்களைச் செய்தவர்கள்.தற்போது மாநகர சபையினைக் கலைப்பதற்காக மஹிந்த குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அவர்களின் கைக்கூலியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சிலர் செயற்படுகின்றனர் என யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.யாழ். மாநகர சபையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.(15)