செய்திகள்

மஹிந்த தேர்தலில் களமிறங்குவது உறுதியானது : கட்சி எதுவென தீர்மானமில்லை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போடடியிடுவது உறுதியாகியுள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் எந்த கட்சியில் போட்டியிடுவது என்பது தொடர்பாக அவர் இன்னும் தீர்மானிக்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இன்று காலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் அவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போடடியிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இடமளிக்காவிட்டால் புதிய அணியொன்றை அமைத்து களமிறங்க வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அது தொடர்பாக அவர் பதிலளிக்கவில்லையெனவும் எதிர்வரும் முதலாம் திகதி அவர் அது தொடர்பான தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று நடைபெற்ற சந்திப்பின் போது முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ கலந்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.